வடக்கு மும்பை குடிசைப்பகுதிகளில் வேகமாக பரவும் கொரோனா போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் நேரில் ஆய்வு


வடக்கு மும்பை குடிசைப்பகுதிகளில் வேகமாக பரவும் கொரோனா போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 28 Jun 2020 6:43 AM IST (Updated: 28 Jun 2020 6:43 AM IST)
t-max-icont-min-icon

வடக்கு மும்பை குடிசைப்பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருவதை அடுத்து அங்கு தடுப்பு பணிகள் குறித்து போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் நேரில் ஆய்வு செய்தார்.

மும்பை,

வடக்கு மும்பை பகுதிகளில் உள்ள தகிசா், போரிவிலி, மலாடு, சார்கோப், காந்திவிலி உள்ளிட்ட இடங்களில் உள்ள குடிசைப்பகுதிகளில் கடந்த 15 நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து வடக்கு மும்பை பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க போலீசார் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் நேரில் பார்வையிட்டார். குறிப்பாக மலாடு அப்பாபாடா உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குடிசைப்பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் தான் அதிகம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் உள்ள கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டு வருகின்றன. அதற்கான பலன்கள் அடுத்த சில நாட்களில் ெதரியும். மும்பையில் தற்ேபாது சுமார் 750 கட்டுபாட்டு பகுதிகள் உள்ளன. இதில் 300 வடக்கு மும்பை பகுதிகளில் உள்ளன. ஹாட்ஸ்பாட்கள் என கண்டறியப்பட்ட 27 இடங்களில் போலீசார் தீவிரமாக ஊரடங்கை அமல்படுத்தி உள்ளனர்.

பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றி, முககவசம் அணிந்து, கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story