தானேயில் கொரோனா நிலைமை குறித்து மத்திய குழு ஆய்வு இறப்பு விகிதத்தை குறைக்க அறிவுறுத்தல்


தானேயில் கொரோனா நிலைமை குறித்து மத்திய குழு ஆய்வு இறப்பு விகிதத்தை குறைக்க அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 28 Jun 2020 1:29 AM GMT (Updated: 28 Jun 2020 1:29 AM GMT)

தானேயில் கொரோனா நிலைமை குறித்து மத்திய குழு ஆய்வு செய்தது.

மும்பை,

தானேயில் கொரோனா நிலைமை குறித்து மத்திய குழு ஆய்வு செய்தது. இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

மராட்டியத்தில் மும்பையை அடுத்து தானேயில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 479 பேர் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 911 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், தானே மாவட்டத்தில் கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பு தொடர்பாக நேற்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லால் அகர்வால், வீட்டு வசதி மற்றும் சிவில் விவகார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் குணால் குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆய்வு செய்தனர்.

தானே நகரத்தில் அமிர்தநகர், இன்ஷான்நகர் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள தனிமைப்படுத்தும் மையங்கள், பால்கும் சாகேட்டில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையையும் பார்வையிட்டனர்.

பின்னர் தானே மாநகராட்சி கமிஷனர் விபின் சர்மா தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள்.

அப்போது தானேயில் கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க கவனம் செலுத்தும்படியும், பரிசோதனை திறனை அதிகரிக்கவும் அறிவுறுத்தினர்.

Next Story