மாவட்ட செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 5,318 பேருக்கு கொரோனா மும்பையில் 105 பேர் உயிரிழப்பு + "||" + With 5,318 COVID-19 cases, Maharashtra sees another record increase

மராட்டியத்தில் மேலும் 5,318 பேருக்கு கொரோனா மும்பையில் 105 பேர் உயிரிழப்பு

மராட்டியத்தில் மேலும் 5,318 பேருக்கு கொரோனா மும்பையில் 105 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் 3-வது நாளாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் 3-வது நாளாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று புதிதாக 5 ஆயிரத்து 318 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மும்பையில் புதிதாக 105 பேர் உயிரிழந்தனர்.

ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மராட்டியத்தை புரட்டி போட்டு உள்ளது. இங்கு நோய் பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்கள் இதுவரை இல்லாத அளவில் கொரோனா பாதிப்பு இருந்தது. கடந்த 25-ந் தேதி 4 ஆயிரத்து 841 பேரும், நேற்று முன்தினம் 5 ஆயிரத்து 24 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.


இந்தநிலையில் 3-வது நாளாக நேற்றும் மாநிலத்தில் நோய் பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று மராட்டியத்தில் 5 ஆயிரத்து 318 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 133 ஆக அதிகரித்து உள்ளது. இதில் கடந்த 20 நாளில் மட்டும் மாநிலத்தில் 73 ஆயிரத்து 158 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல மாநிலத்தில் மேலும் 167 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை மராட்டியத்தில் 7 ஆயிரத்து 273 பேர் நோய் தொற்றுக்கு உயிரிழந்து உள்ளனர். இதேபோல 84 ஆயிரத்து 245 பேர் குணமடைந்து உள்ளனர். மும்பையில் நேற்று புதிதாக 1,402 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 ஆயிரத்து 252 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 105 போ் உயிரிழந்து உள்ளனர். நகரில் இதுவரை 4 ஆயிரத்து 284 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல தானேயில் மாநகராட்சியில் புதிதாக 410 பேருக்கும், கல்யாண் - டோம்பிவிலி மாநகராட்சி 514 பேருக்கும், புனே மாநகராட்சியில் 429 பேருக்கும் கொேரானா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தானே, கல்யாண்- ேடாம்பிவிலியில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருவது அப்பகுதி மக்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டியத்தில் மற்ற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புக்குறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி - 8,896 (281 பேர் பலி), தானே புறநகர் - 3,990 (61), நவிமும்பை மாநகராட்சி - 7,239 (173), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 6,135 (83), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 1,547 (35), பிவண்டி மாநகராட்சி - 1,796 (70), மிரா பயந்தர் மாநகராட்சி - 3,132 (116), வசாய் விரார் மாநகராட்சி - 3,918 (89), ராய்காட் - 1,557 (42),

பன்வெல் மாநகராட்சி - 1,961 (53). மாலேகாவ் மாநகராட்சி - 1,042 (80). புனே மாநகராட்சி - 16,077 (591), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி - 2,107 (46), சோலாப்பூர் மாநகராட்சி - 2,258 (231), அவுரங்காபாத் மாநகராட்சி - 3,870 (217), நாக்பூர் மாநகராட்சி - 1,230 (12).