சின்னமுட்டத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா நோய் தடுப்பு பணிகள் தீவிரம்
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் சுமை தூக்கும் தொழிலாளிக்கு கொரோனா கண்டறிப்பட்ட நிலையில், ஒரே குடும்பத்தில் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பேரூராட்சி நிர்வாகம், நோய் தடுப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மீன்வளத்துறை சார்பில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வழுக்கம்பாறையை சேர்ந்த 47 வயது மீன் சுமை தூக்கும் தொழிலாளிக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.
இந்தநிலையில் சின்னமுட்டம் ஊரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மீனவர்
சின்னமுட்டம் அருகே கார்மல் மாதா தெருவை சேர்ந்தவர் 54 வயது மீனவர். இவர், வெளிமாநிலங்களில் இருந்து விசைப்படகின் என்ஜின்களை வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக அவர் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மராட்டிய மாநிலங்களுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். தற்போது ஊரடங்கு காரணமாக அவர் வீட்டிலேயே இருந்து வந்தார். ஆனாலும், தொழில் சம்பந்தமாக வெளிஇடங்களை சேர்ந்த சிலர் இ-பாஸ் பெற்று அவரை நேரில் சந்தித்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீனவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
தகவல் அறிந்த அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வர்க்கீஸ் ராஜா, சுகாதார ஆய்வாளர்கள் அஜய், லோகேஷ் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் மீனவர் வீடு உள்ள கார்மல் மாதா தெருவுக்கு விரைந்து சென்று மீனவரின் 47 வயது மனைவி, மகன், மகள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 12 பேரிடம் சளி, ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில், மனைவி, மீனவரின் 17 வயது மகள் ஆகியோருக்கும் தொற்று இருப்பது நேற்று மாலை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மீனவர், அவருடைய மனைவி, மகள் ஆகியோர்ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மீன் வியாபாரி
கன்னியாகுமரி அஞ்சுகூட்டுவிளையை சேர்ந்தவர் 46 வயது மீன் வியாபாரி. இவர் சின்னமுட்டம் துறைமுக மீன் ஏலக்கூடத்தில் ஏலம் விடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி கொரோனாவார்டில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும், அவருடைய குடும்பத்தினர் உள்பட தொடர்பில் இருந்த 11 பேருக்கு சளி, ரத்த மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தடுப்பு பணிகள் தீவிரம்
இதற்கிடையே கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் சத்தியதாஸ், பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், மேற்பார்வையாளர் பிரதீஷ் ஆகியோரின் முன்னிலையில் தூய்மை பணியாளர்கள் கார்மல் மாதா தெரு, அஞ்சுகூட்டுவிளை ஆகிய பகுதிகளில் பிளச்சிங் பவுடர் தூவுதல், கிருமி நாசினி தெளித்து தொற்று தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சின்னமுட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா கண்டறிப்பட்ட நிலையில், கன்னியாகுமரியில் ஒரு மீன் வியாபாரிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் சின்னமுட்டம், கன்னியாகுமரி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Related Tags :
Next Story