மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் தீவிரம் அடையும் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அதிர்ச்சி தகவல் + "||" + Coronavirus intensifies in Karnataka - Deputy First-Minister Aswath Narayan Shock Information

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் தீவிரம் அடையும் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அதிர்ச்சி தகவல்

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் தீவிரம் அடையும் - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அதிர்ச்சி தகவல்
தற்போதைய நிலையை பார்க்கும்போது, கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் தீவிரம் அடையும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அந்த மாவட்ட பொறுப்பு மந்திரியான துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நேற்று ராஜராஜேஸ்வரி, தயானந்த் சாகர் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அந்த கல்லூரிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் ராமநகருக்கு வந்து, கலெக்டர் உள்பட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனாவை தடுப்பது குறித்து அவர் ஆலோசித்தார். இந்த ஆலோசனைக்கு பிறகு அஸ்வத் நாராயண், நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-


ராமநகரில் கொரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. ராஜராஜேஸ்வரி மருத்துவ கல்லூரியில் 600 படுக்கைகளை கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ஒதுக்க நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக ஒப்பந்தம் செய்துகொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவிலும் 110 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவி வசதி உள்ளது. ராஜராஜேஸ்வரி கல்லூரியில் உள்ள 150 டாக்டர்களை ராமநகருக்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதிப்பதாக அந்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மொத்தம் 400 செவிலியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் 200 பேர் பணிக்கு ஆஜராவதாகவும், அதில் 20 பேரை கொரோனா சிகிச்சை பணிக்கு அனுப்ப தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ராமநகரில் தற்போது 34 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதே போல் தயானந்த் சாகர் மருத்துவ கல்லூரியில் 30 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 23 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நோயாளிகளின் சிகிச்சை செலவை அரசே ஏற்கும். எக்காரணம் கொண்டும் நோயாளிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதை அரசு அனுமதிக்காது. தற்போதைய நிலையை பார்க்கும்போது, அடுத்து வரும் நாட்களில் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் தீவிரம் அடையும். அதை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை அதிகாரிகள் செய்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

மேலும் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் தைரியமாக இருக்கும்படி கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரி, எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா
கர்நாடகத்தில் மேலும் ஒரு மந்திரி, எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
2. நாடு முழுவதும் கொரோனா பாதித்த நகரங்களில் பெங்களூருவுக்கு 3-வது இடம்
நாட்டிலேயே கொரோனா பாதித்த நகரங்களில் பெங்களூரு 3-வது இடத்தில் இருக்கிறது. மற்ற நகரங்களை விட பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
3. மேற்கு வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்
மேற்கு வங்காளத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4. குப்புறப்படுத்தால் கொரோனா நோயாளிகளை காப்பாற்றலாம்-விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளை குப்புறப்படுக்க வைத்தால் உயிரைக்காப்பாற்றி விடலாம், ஆனால் மூட்டு நரம்புகள் பாதிப்புக்குள்ளாகி விடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
5. 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா
சட்டசபை நாளை கூடுவதை முன்னிட்டு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பாதிப்பு இல்லை.