தேனி மாவட்டத்தில் எம்.எல்.ஏ. டிரைவர் உள்பட மேலும் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 658 ஆக அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் எம்.எல்.ஏ. டிரைவர் உள்பட மேலும் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 658 ஆக அதிகரித்துள்ளது.
தேனி,
தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 596 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று மேலும் 62 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில், க.விலக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு, கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு ஆகிய 2 பேரும் அடங்குவர்.
கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையனிடம் கார் டிரைவராக வேலை பார்த்த கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த 29 வயது வாலிபருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கெங்குவார்பட்டியில் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள போலீஸ் காரரின் உறவினர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
உத்தமபாளையத்தில் 9 மாத கர்ப்பிணி உள்பட 3 பேருக்கும், மல்லிங்காபுரத்தில் 9 மாத கர்ப்பிணிக்கும், பெரியகுளத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர், தனியார் வங்கி காவலாளி மற்றும் 4 பெண்கள் உள்பட 9 பேருக்கும், தேனியில் பிரபல நகைக்கடை உரிமையாளர், அவருடைய மனைவி, சிவகங்கை நகராட்சி பில் கலெக்டராக பணியாற்றுபவர் உள்பட 6 பேருக்கும், பழனிசெட்டிபட்டி, க.புதுப்பட்டி ஆகிய இடங்களில் தலா 2 பேருக்கும், பூதிப்புரத்தில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள மஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த நர்சு பழனி அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் அவருடைய குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இவருடைய தாய், தந்தை, தங்கை உள்பட 5 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
மேலும், ஆண்டிப்பட்டியில் 5 பேருக்கும், பாப்பம்மாள்புரம், டி.சுப்புலாபுரம், கோவில்பட்டி, ஜி.மீனாட்சிபுரம் பகுதியில் தலா ஒருவருக்கும், குள்ளப்புரத்தில் கர்ப்பிணிக்கும், போ.அம்மாபட்டியில் அரசு பஸ் டிரைவர், போடி, ஜெயமங்கலம், தம்பிநாயக்கன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, வடுகப்பட்டி ஆகிய ஊர்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய-திபெத் எல்லையில் பாதுகாப்பு படையில் பணியாற்றும் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டியை சேர்ந்த நபர் சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்த நிலையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல், கம்பத்தில் பெண் உள்பட 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.ஒரே நாளில் 62 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 658 ஆக உயர்ந்துள்ளது.

Related Tags :
Next Story