தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியில் கொரோனா பரிசோதனை மையம் - கலெக்டர் திறந்து வைத்தார்


தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியில் கொரோனா பரிசோதனை மையம் - கலெக்டர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 30 Jun 2020 5:01 AM IST (Updated: 30 Jun 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை மையத்தை கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் திறந்து வைத்தார்.

தென்காசி,

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடி செலவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள எந்திரம் சுமார் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் முருகவேல், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், ஆர்.டி.பி.சி.ஆர். நோடல் அதிகாரி டாக்டர் மாயா குமார், மாவட்ட நுண்ணுயிரியல் வல்லுனர் டாக்டர் மலர், லேப் டெக்னீசியன் ரிஸ்வான், செவிலியர் கண்காணிப்பாளர் மேரி புஷ்பம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தனலட்சுமி, உதயகுமார், இப்ராகிம், சுரேந்தர் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். 

Next Story