தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 1 July 2020 2:00 AM IST (Updated: 1 July 2020 2:00 AM IST)
t-max-icont-min-icon

சின்ன காஞ்சீபுரம் அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

காஞ்சீபுரம்,

சின்ன காஞ்சீபுரம் யதோக்தகாரி வடக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் உலகமூர்த்தி. இவரது மகன் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 28). இவர் காஞ்சீபுரம் ரெட்டிபேட்டை தெருவில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு ராகிணி என்ற மனைவி உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான ராகிணி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் விக்னேஷ் தொழில் தொடங்க மனைவி ராகிணியிடம் நகையை கேட்டுள்ளார். ராகிணி தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story