புதிய தலைமை செயலாளர் சஞ்சய் குமார் பொறுப்பேற்றார்
மாநிலத்தின் புதிய தலைமை செயலாளராக சஞ்சய் குமார் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அஜாய் மேத்தா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார்.
மும்பை,
மராட்டிய தலைமை செயலாளர் அஜாய் மேத்தா நேற்றுடன் ஓய்வு பெற்றார். இந்தநிலையில் மாநிலத்தின் புதிய தலைமை செயலாளராக சஞ்சய் குமார் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அஜாய் மேத்தா பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார். சஞ்சய் குமார் 1984-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர் மாநில உள்துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்தார். இந்த துறையையும் கூடுதலாக சேர்த்து கவனிக்க உள்ளார்.இதேபோல அஜாய் மேத்தா கொேரானா பிரச்சினையை கருத்தில் கொண்டு முதல்-மந்திரியின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவியில் அஜாய் மேத்தா இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்க உள்ளார்.

Related Tags :
Next Story