மாவட்ட செய்திகள்

நோய் கிருமிகளை விரட்ட எளிய வழிமுறைகள் அக்குபஞ்சர் டாக்டர் யோசனை + "||" + To disinfect the germs of the disease Simple instructions Acupuncture Doctor idea

நோய் கிருமிகளை விரட்ட எளிய வழிமுறைகள் அக்குபஞ்சர் டாக்டர் யோசனை

நோய் கிருமிகளை விரட்ட எளிய வழிமுறைகள் அக்குபஞ்சர் டாக்டர் யோசனை
நோய் கிருமிகளை விரட்ட எளிய வழிமுறைகள் உள்ளன என்று அக்குபஞ்சர் டாக்டர் தெரிவித்தார்.
புதுச்சேரி,

கடலூர் மஞ்சக்குப்பம் சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக் மருத்துவர் உஷா ரவி தெரிவித்துள்ள மருத்துவக்குறிப்பு வருமாறு:-

இயற்கை நமக்கு வாரி வழங்கியுள்ள செல்வங்களை பொக்கிஷமாக காத்து கடைபிடித்து வந்தாலே நோய் கிருமிகள் நம்மை தாக்கிட அஞ்சும். இதற்கு உணவு பழக்க வழக்கம் மிக முக்கியம். பாரம்பரியமான இயற்கை உணவை சாப்பிட்டாலே நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். அதன்மூலம் நோய் கிருமிகளை அண்ட விடாமல் செய்யலாம்.


உணவு முறை, இயற்கை வழி சார்ந்த 14 வகையான சிகிச்சை மற்றும் தெரபியின் மூலமாக நோய்களுக்கு தீர்வு காணப்படுகிறது. சிறந்த சிகிச்சை, உணவு நல ஆலோசனை மூலம் மூட்டுவலி, முதுகு, கழுத்து, தோல்பட்டை போன்ற ஏராளமான வலி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

முடி உதிர்தல், பொடுகு, இளநரை, முடி வளர்ச்சியின்மை போன்ற பிரச்சினைகளுக்கு காஸ்மெடிக் அக்குபஞ்சர், செவன் ஸ்டார் அக்குபஞ்சர் ஆகிய சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். குழந்தையில்லாத குறையை போக்கவும் அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை உண்டு. அத்துடன் யோகாவும் சொல்லித்தரப்படுகிறது.

எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய் கிருமிகள் தாக்குதலில் இருந்து விடுபட முடியும். சிறு தானியங்களை உணவில் சேர்த்து வந்தால் நோய் கிருமிகள் நம்மை நெருங்காது. இவ்வாறு அவர் கூறினார்.