மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் + "||" + Prevent coronavirus virus Needlessly leave the house Avoid coming out Collector appeal to the public

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தேவையில்லாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் மெகராஜ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மனுக்களை போடும் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் அந்த பெட்டியின் அருகில் நின்று கொண்டு கலெக்டர் மெகராஜ், போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.


அப்போது தேவையில்லாமல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த நபர்களை திருப்பி அனுப்பினர். பின்னர் கலெக்டர் மெகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க கலெக்டர் அலுவலகத்திற்கு தேவையில்லாமல் வருவோரை தடுக்கும் வகையில் நுழைவுவாயில் முன்பு பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போடுவதற்கு வசதியாக பெட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பெட்டியில் மனுக்களை செலுத்தினால் உரிய பதில் அளிக்கப்படும்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வெளியே வராமல் இருப்பது கொரோனா நோய் தொற்றுதலை தடுப்பதில் முக்கிய பங்காகும். அலுவலகத்திற்கு வந்து மனுக்களை எழுதி வழங்க கூடாது என்பதற்காக தான் இ-பாஸ் பெறும் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இ-பாஸ் வாங்க கலெக்டர் அலுவலத்திற்கு வர வேண்டாம். அரசு அலுவலர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்து கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - கவர்னர் வேண்டுகோள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.