கரையாம்புத்தூரில் பெண் ஊழியருக்கு தொற்று; வங்கி மூடல்


கரையாம்புத்தூரில் பெண் ஊழியருக்கு தொற்று; வங்கி மூடல்
x
தினத்தந்தி 2 July 2020 3:30 AM IST (Updated: 1 July 2020 11:26 PM IST)
t-max-icont-min-icon

கரையாம்புத்தூரில் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர் பணியாற்றிய வங்கி மூடப்பட்டது.

பாகூர்,

கரையாம்புத்தூரில் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர் பணியாற்றிய வங்கி மூடப்பட்டது.

வங்கி பெண் ஊழியர்

நெட்டப்பாக்கத்தை அடுத்த கரையாம்புத்தூரில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இங்கு மணமேடு கிராமத்தை சேர்ந்த 34 வயது பெண் ஒருவர், ஸ்வைப் எந்திரம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கும் சேவை செய்து வருகிறார். அந்த பெண்ணுக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது.

இதையடுத்து சுகாதாரத்துறை ஊழியர்கள் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. உடனே அவர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் வேலை செய்த வங்கியில் நோய் பரவலை தடுக்க பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர். பின்னர் வங்கி மூடப்பட்டது.

தெருவுக்கு சீல்

வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர் வசித்து வந்த தெரு ‘சீல்’ வைக்கப்பட்டு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரையாம்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story