திருச்சி மாநகரில் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க முன்னுரிமை புதிய போலீஸ் கமிஷனர் லோகநாதன் பேட்டி


திருச்சி மாநகரில் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க முன்னுரிமை புதிய போலீஸ் கமிஷனர் லோகநாதன் பேட்டி
x
தினத்தந்தி 1 July 2020 11:30 PM GMT (Updated: 2020-07-02T02:41:40+05:30)

திருச்சி மாநகரில் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க முன்னுரிமை கொடுக்கப்படும் என்று புதிய போலீஸ் கமிஷனர் லோகநாதன் கூறி உள்ளார்.

திருச்சி, 

திருச்சி மாநகரில் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க முன்னுரிமை கொடுக்கப்படும் என்று புதிய போலீஸ் கமிஷனர் லோகநாதன் கூறி உள்ளார்.

புதிய போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வந்த வரதராஜூ நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து திருச்சி மாநகரின் புதிய போலீஸ் கமிஷனராக தஞ்சை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த லோகநாதன் பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட் டார். போலீஸ் கமிஷனர் லோகநாதன் நேற்று மாலை திருச்சி மாநகர போலீஸ் கமி ஷனர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு போலீஸ் அதிகாரி கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கமிஷனர் லோகநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

போக்குவரத்து பிரச்சினை

திருச்சி மாநகரில் சட்டம்- ஒழுங்கை பராமரிக்கவும், குற்ற நடவடிக்கையை தடுக்கவும், கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கவும் போலீ சார் சிறந்த முறையில் பணி புரிய அறிவுறுத்தப்படும். குறிப் பாக போக்குவரத்து பிரச்சினையை தீர்க்கவும், சாலை விபத்துக்களை கட்டுப் படுத்தவும் முன்னுரிமை கொடுக்கப்படும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் ஆன்லைன் மூலம் புகார்களை அனுப்பி நிவாரணம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக் டர்கள் நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில் பொது மக்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாட்ஸ்அப் எண்(96262-73399) மூலம் எழுத்து பூர்வமாக புகார்களை தெரிவித்தால் துரித நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், புகார்களின் தன்மைக்கு ஏற்ப காணொலி மூலம் புகார்களை தெரிவிக்க புகார்தாரர்களுக்கு உரிய ஐ.டி. வழங்கப்படும். மேற் கண்ட எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 11 மணி முதல் 12 மணி வரை தங்கள் புகார்களை காணொலி மூலம் தெரிவிக்கலாம்.

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீ சாருக்கும், பொது மக்களுக்கும் நல்லுறவு ஏற்படும் வகையில் பணிபுரிய அறிவுறுத்தப்படும். மேலும், திருச்சி மாநகரில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும்விதமாக பொது மக்கள் மேலே குறிப்பிட்ட வாட்ஸ்அப் எண்ணிற்கோ அல்லது போலீஸ் கமிஷனரின் செல்போன் எண்ணிற்கோ (98844-47581) தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Next Story