வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க2 ஆயிரம் படுக்கைகள் தயார் கலெக்டர் தகவல்

x
தினத்தந்தி 1 July 2020 10:00 PM GMT (Updated: 2020-07-02T03:04:12+05:30)

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அரசு, தனியார் மருத்துவமனைகள், தங்கும் விடுதிகளில் 2,009 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அரசு, தனியார் மருத்துவமனைகள், தங்கும் விடுதிகளில் 2,009 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2 ஆயிரம் படுக்கைகள்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தொடர்பில் உள்ள அனைவருக்கும் வைட்டமின் சி, ஜிங் மாத்திரைகள், கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 350, சி.எம்.சி. மருத்துவமனையில் 550, பென்ட்லேன்ட் மருத்துவமனையில் 120, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 50, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 100, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் 463, அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் 10, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில் 100, வி.ஐ.டி.யில் 186, நாராயணி செவிலியர் கல்லூரியில் 80 படுக்கைகள் என மொத்தம் 2,009 படுக்கைகள் கொரோனா தொற்று சிகிக்சைக்காக தயார் நிலையில் உள்ளன.

சி.எம்.சி.மருத்துவமனை, தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, வி.ஐ.டி. ஆகியவற்றில் கூடுதலாக 819 படுக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவை தவிர மற்ற நோயாளிகளுக்கும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க போதிய படுக்கைகள் உள்ளன.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் சில தளர்வுகளுடன் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்திலும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். பிற மாவட்டங்களை போல் வருகிற 5, 12, 19, 26 ஆகிய 4 ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

வேலூர் மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. நகர் புற கோவில்கள் மற்றும் கிராமப்புறங்களில் பெரிய கோவில்களில் வழிபாடு நடத்த தடை நீடிக்கிறது.

கிராமப்புற பகுதி கோவில்களில் முகக் கவசம் அணியாமல் யாரையும் அனுமதிக்கக் கூடாது. சிலைகளை தொட்டு வணங்கக் கூடாது. வழிபாட்டுத் தலங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது. சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும். பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யக்கூடாது. கோவில் பூசாரிகள், மதக்குருமார், பாதிரியார்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

100 சதவீத பணியாளர்களுடன்...

சிறு, குறு மற்றும் பெரிய நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களும் பழையபடி வழக்கம்போல் செயல்படலாம். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா தொற்றை தடுக்கும் பணியில் மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

---

வேலூர் மாவட்டத்தில்
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க2 ஆயிரம் படுக்கைகள் தயார்
கலெக்டர் தகவல்
வேலூர், ஜூலை.2-

Next Story