கோவையில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செட்டிவீதியில் மட்டும் 13 பேருக்கு பாதிப்பு


கோவையில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செட்டிவீதியில் மட்டும் 13 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 2 July 2020 5:50 AM IST (Updated: 2 July 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நேற்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கோவை,

கோவையில் நேற்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதில் செட்டிவீதியில் மட்டும் 13 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா

கோவையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் கோவையில் அதிகளவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான இடங்கள் கண்டறியப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி செட்டிவீதி, தெலுங்கு வீதி, மசக்காளிபாளையம், துடியலூர், வெள்ளலூர் உள்ளிட்ட கட்டுப்பாட்டு மண்டலங்களில் நாள்தோறும் ஏராளமான பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

செட்டிவீதியை சேர்ந்த 66 வயது முதியவர், 3 வயது சிறுமி, 19 வயது ஆண், 17 வயது ஆண், 34 வயது பெண், 26 வயது ஆண், 24 வயது பெண், 28 வயது பெண், 11 வயது சிறுமி, 7 வயது சிறுவன், 31 வயது பெண், 36 வயது ஆண், 34 வயது பெண் என ஒரே பகுதியில் மட்டும் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

73 வயது மூதாட்டி

அதேபோல் மசக்காளிபாளையம் பாலன் நகரில் 22 வயது பெண், 27 வயது பெண், 43 வயது பெண், 17 வயது சிறுவன், 69 வயது மூதாட்டி, 35 வயது பெண், 10 வயது சிறுமி, 63 வயது முதியவர் ஆகிய 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் சாய்பாபா காலனி சின்னம்மாள் வீதியை சேர்ந்த 23 வயது பெண், 19 வயது ஆண், 14 வயது சிறுமி, சூலூர், கலங்கல் சாலையை சேர்ந்த 52, 42, 22 வயது பெண்கள், 58 வயது ஆண், கோவில்மேட்டை சேர்ந்த 73 வயது மூதாட்டி, ராமநாதபுரத்தை சேர்ந்த 33 வயது பெண், கரும்புக்கடை ராஜீவ் நகரை சேர்ந்த 29 வயது வாலிபர், ஆசாத் நகரை சேர்ந்த 53 பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதியானது.

டெல்லி விமானம்

அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சந்தேகத்தில் சிகிச்சைக்கு வந்தவர்களில் டவுன்ஹால் சலீவன் வீதியை சேர்ந்த 54 வயது ஆண், உக்கடம் சி.எம்.சி. காலனியை சேர்ந்த 43, 21 வயது ஆண்கள், பெரியகடை வீதியை சேர்ந்த 30 வயது ஆண், செல்வபுரத்தை சேர்ந்த 33 வயது பெண் ஆகிய 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் இருந்து ரெயில் மூலம் வந்த கோவை கணபதியை சேர்ந்த 68 வயது மூதாட்டி, டெல்லி விமானத்தில் வந்த 35, 45 வயது ஆண்கள், சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் வந்த 22 வயது பெண், 30, 37, 47, 51 ஆண்கள் ஆகிய 8 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Next Story