திருப்போரூரில் இன்று மின்தடை


திருப்போரூரில் இன்று மின்தடை
x
தினத்தந்தி 2 July 2020 6:13 AM IST (Updated: 2 July 2020 6:13 AM IST)
t-max-icont-min-icon

திருப்போரூரில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

திருப்போரூர்,

திருப்போரூர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகவே இன்று காலை 9 முதல் மாலை 4 மணி வரை திருப்போரூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட திருப்போரூர், தண்டலம், காலவாக்கம், கேளம்பாக்கம், கோவளம், முட்டுக்காடு, தையூர் (ஒரு பகுதி), இள்ளலூர், மடையத்தூர், செம்பாக்கம், கரும்பாக்கம், கொட்டமேடு, மயிலை, அனுமந்தபுரம், சென்னேரி, திருவடி சூலம் போன்ற பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை மறைமலைநகர் செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Next Story