கொரோனா பரவி வரும் தற்போதைய நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்க முடியவில்லை மந்திரி சுரேஷ்குமார் பேட்டி


கொரோனா பரவி வரும் தற்போதைய நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்க முடியவில்லை மந்திரி சுரேஷ்குமார் பேட்டி
x
தினத்தந்தி 3 July 2020 4:15 AM IST (Updated: 2 July 2020 11:14 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவி வரும் தற்போதைய நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்க முடியவில்லை என்று மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார்.

துமகூரு, 

கொரோனா பரவி வரும் தற்போதைய நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்க முடியவில்லை என்று மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார்.

பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பள்ளிகளை திறக்க நடவடிக்கை

“கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்க முடியவில்லை. ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரின் கருத்துகளை கேட்டு வருகிறோம். ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு பள்ளிகளை திறப்பதாக இருந்தாலும், முதலில் பி.யூ.கல்லூரி, உயர்நிலை பள்ளி ஆகியவை முதல் கட்டமாக திறக்கப்படும். அதன் பிறகு நடுநிலை பள்ளிகள், பிறகு உயர் தொடக்க பள்ளிகள், பின்னர் தொடக்க பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வட்டியில்லா கடன்

கர்நாடகத்தில் அரசு மானியம் பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்து அந்த சங்க பிரதிநிதிகளை முதல்-மந்திரியிடம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அந்த தனியார் பள்ளிகள், வட்டியில்லா கடன் வழங்கினால், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

இதற்காக ஒரு திட்டத்தை வகுக்கும்படி நிதித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவடைந்த பிறகு இதற்கான அறிவிப்பு வெளியாகும். தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.”

இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.

Next Story