சன்னாநேரி குளம் தூர்வாரும் பணி இன்பதுரை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சன்னாநேரி குளத்தை தூர்வாரும் பணியை இன்பதுரை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நெல்லை,
சன்னாநேரி குளத்தை தூர்வாரும் பணியை இன்பதுரை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
குளம் தூர்வாரும் பணி
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி கலந்தப்பனை கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சன்னாநேரி குளத்தை குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்க தமிழக அரசு சார்பில் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த குளத்தில் குடிமராமத்து பணியை ஐ.எஸ்.இன்பதுரை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த குளத்தை தூர்வாருவதன் மூலம் பணகுடி-கலந்தப்பனை மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் பயன் அடைவார்கள்.
இந்த நிகழ்ச்சியில், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வள்ளியூர் அழகானந்தம், ராதாபுரம் அந்தோணி அமலராஜா, பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் கிருஷ்ணன், உதவி பொறியாளர் சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்து இருப்பவர்களுக்கு ரூ.1000 நிதி உதவி வீட்டிற்கு சென்று வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திசையன்விளை தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கும் தொடக்க நிகழ்ச்சி திசையன்விளை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் பாஸ்கரன் தலைமை தாங்கினார். இன்பதுரை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நிவாரண உதவி தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். இதில் வருவாய் ஆய்வாளர் கிறிஸ்டி தவசிமணி, கிராம நிர்வாக அலுவலர் அய்யாத்துரை, ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயக்குமார், அரசு வக்கீல் பழனிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story