புதுச்சேரி, காரைக்காலில் ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 800-ஐ தாண்டியது


புதுச்சேரி, காரைக்காலில் ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 800-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 3 July 2020 3:30 AM IST (Updated: 3 July 2020 1:58 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி, காரைக்காலில் நேற்று ஒரேநாளில் 63 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதன்மூலம் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவ ர்களின் எண்ணிக்கை 800-ஐ தாண்டியது.

புதுச்சேரி, 

புதுச்சேரி, காரைக்காலில் நேற்று ஒரேநாளில் 63 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதன்மூலம் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவ ர்களின் எண்ணிக்கை 800-ஐ தாண்டியது.

கொரோனா பாதிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தற்போது 6-ம் கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி 180-க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் நேற்று முன்தினம் 583 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஆண்கள் 34, பெண்கள் 29 பேர் ஆவார்கள். கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 52 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 8 பேரும், காரைக்காலில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 18 வயதுக்குட்பட்டவர்கள் 9 பேரும், 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 50 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 4 பேரும் என உள்ளனர்.

800-ஐ தாண்டியது

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக இதுவரை 802 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 459 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 331 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை 18,092 பேருக்கு தொற்று பரிசோதனை நடந்தது. இதில் 307 பேர் பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story