சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மதுபான கடைக்கு ‘சீல்’ உழவர்கரை நகராட்சி அதிரடி
சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மதுபான கடைக்கு சீல் வைத்து உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
புதுச்சேரி,
சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மதுபான கடைக்கு சீல் வைத்து உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
கண்காணிப்பு
புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி புதுவை உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையர் கந்தசாமி, ஊழியர்களை பல்வேறு குழுக்களாக பிரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக ஆரோக்கிய சேது செயலியை செல்போன்களில் பதிவிறக்கம் செய்யும்படி வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் அதிகாரிகள் கடைகளில் அவ்வப்போது கண்காணித்து ஊரடங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளை மூடி ‘சீல்’ வைத்தும், தனி நபர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள்.
மதுபான கடைக்கு சீல்
இந்த நிலையில் நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையில் அதிகாரிகள் கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா? முக கவசம் அணிந்துள்ளனரா? என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோரிமேடு பூத்துறை சாலையில் உள்ள தனியார் மதுபான கடையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் மது விற்பனை நடந்தது. உடனே அந்த கடையை மூடி நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
மேலும் நேற்று உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முக கவசம் அணியாமல் சென்ற 60 பேருக்கு ரூ.4,100 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் உழவர்கரை நகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட 96 கட்டுப்பாட்டு மண்டலங்களில் 2 நாட்களுக்கு ஒருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story