இந்திய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதல்களை பின்பற்றி சிறைகளில் கொரோனா பரவலை தடுக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
இந்திய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதல்களை பின்பற்றி சிறைகளில் கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
இந்திய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதல்களை பின்பற்றி சிறைகளில் கொரோனா பரவலை தடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிறைகளில் கொரோனா
கொரோனா பிரச்சினையில், மராட்டியத்தில் உள்ள ஜெயில் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மும்பை ஐகோர்ட்டில் பொது நலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை தலைமை நீதிபதி தீபான்கர் தத்தா தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, மாநில அரசின் தரப்பில் மாநிலத்தில் உள்ள கைதிகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் குறித்த தகவல்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில் கைதிகளுக்கு கொரோனா சோதனை அதிகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், தொற்றால் பாதிக்கப்பட்ட கைதிகள் குறித்த விவரம் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்படுவதாகவும், தனிமைப்படுத்துதல், சோதனை முறைகளில் இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் உறுதி அளித்து இருந்தது.
மாநில அரசுக்கு உத்தரவு
மாநில அரசின் உறுதி மொழிகளை ஏற்று கொண்ட நீதிபதிகள், ‘‘இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதல்களை பின்பற்றி சிறைகளில் கொரோனா பரவலை தடுக்க வேண்டும். நோய் அறிகுறி உள்ள கைதிகளுக்கு பரிசோதனை நடத்த வேண்டும். சமூக இடைவெளியை உறுதி செய்ய சிறைகளில் நெருக்கடியை குறைக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story