வாலிபர் உள்பட மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலி குழந்தைகள் உள்பட 81 பேருக்கு தொற்று
திண்டுக்கல் மாவட்டத்தில் வாலிபர் உள்பட மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். மேலும் குழந்தைகள் உள்பட 81 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக் கப் பட்ட நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதில் 300-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். அதேநேரம் வாலிபர் உள்பட 10 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள் ளனர். இந்த நிலை யில் திண்டுக்கல்லை சேர்ந்த 60 வயது முதியவருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் திண்டுக் கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட் டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட தோடு, கொரோனா பரிசோத னையும் நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
அதேபோல் நத்தம் தாலு காவை சேர்ந்த 25 வயது வாலிபருக்கு கடந்த சில நாட் களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை யடுத்து அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர், நேற்று பரிதாபமாக இறந்தார். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலி யான வர்களின் மொத்த எண் ணிக்கை 12 ஆக உயர்ந்தது. மேலும் 12 பேர் நேற்று குண மடைந்து வீடு திரும்பினர்.
81 பேருக்கு தொற்று
இதற்கிடையே வெளியூர் களில் இருந்து வந்தவர்கள், கொரோனாவால் பாதிக்கப் பட்ட நபர்கள் வசிக்கும் பகுதி களை சேர்ந்தவர்களிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 4 குழந்தைகள், 37 பெண்கள், 5 முதியவர்கள் உள்பட நேற்று மட்டும் 81 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப் பட்டது. இதில் திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தை உள்பட 13 பேரும், நத்தம் தாலுகாவில் 2 குழந்தை கள் உள்பட 27 பேரும், நிலக் கோட்டை தாலுகாவில் பெண் போலீஸ் ஏட்டு உள்பட 11 பேரும், கொடைக்கானல் தாலுகாவில் குழந்தை உள்பட 15 பேரும், பழனியில் 4 பேரும், ஒட்டன்சத்திரம் மற்றும் ஆத்தூர் தாலுகாக்களில் தலா 2 பேரும், குஜிலியம்பாறை, வேடசந்தூர் ஆகிய தாலுகாக் களில் தலா ஒருவரும், மதுரையை சேர்ந்த 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.
மேலும் கொடைக்கானலை சேர்ந்தவர்கள் கொடைக் கானல் அரசு மருத்துவ மனை யிலும், பழனியை சேர்ந்தவர் களுக்கு பழனி அரசு மருத்துவ மனையிலும், மீதமுள்ள நபர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வார்டி லும் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். இதில் கொடைக் கானல், பழனி மற்றும் திண்டுக் கல்லில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் முதல் முறையாக கொரோனா சிகிச்சை அளிக் கப் படுவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story