குடிநீருக்காக காத்துக்கிடக்கும் மக்கள்


குடிநீருக்காக காத்துக்கிடக்கும் மக்கள்
x
தினத்தந்தி 3 July 2020 2:42 AM GMT (Updated: 3 July 2020 2:42 AM GMT)

கமுதி அருகே ஆதிபராசக்தி நகரில் தண்ணீர் பிடிக்க பெண்கள் நாள் முழுவதும் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கமுதி,

கமுதி அருகே ஆதிபராசக்தி நகரில் சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு 11 ஆண்டுகளாக காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் இல்லை. பசும்பொன் அருகே அமைக்கப்பட்ட ஆழ்குழாயில் இருந்து 2 நாளைக்கு ஒருமுறை இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யபடுகிறது. தெருக்குழாய்கள் அமைக்கப்படாததால் கோட்டைமேடு பகுதியில் இருந்து கமுதி செல்லும் வழியில் எட்டுக்கண் பாலம் அருகே சாலையோரத்தில் உள்ள சிறிய தொட்டியில் இருந்து குடிநீர் சேகரித்து செல்கின்றனர். இதனால் தண்ணீர் பிடிக்க பெண்கள் நாள் முழுவதும் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காவிரி கூட்டுக்குடிநீர் முறையாக வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story