தஞ்சை மாவட்டத்தில் போலீஸ்காரர், டாக்டர் உள்பட 15 பேருக்கு கொரோனா
தஞ்சை மாவட்டத்தில் போலீஸ்காரர்- டாக்டர் உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது சென்னை, வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மூலம் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் தஞ்சையை சேர்ந்த 3 பேரும், கும்பகோணத்தை சேர்ந்த 5 பேரும், பட்டுக்கோட்டை, ஒரத்தநாட்டை சேர்ந்த தலா 2 பேரும், மதுக்கூர், பாபநாசம், திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவர். இதில் கும்பகோணத்தை சேர்ந்த 4 வயது சிறுவன், அவனுடைய தாய் மற்றும் அய்யம்பேட்டையை சேர்ந்த 2 வயது சிறுவனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சோதனை சாவடியில் பணியாற்றிய அதிராம்பட்டினத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கும், கும்பகோணத்தை சேர்ந்த 72 வயதான பெண் டாக்டர் ஒருவரும் அடங்குவர்.
21 பேர் வீடு திரும்பினர்
இதையடுத்து 15 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 21 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
Related Tags :
Next Story