தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண பொருட்கள் இந்திய இந்து வளர்ச்சி கழகத்தினர் வழங்கினர்


தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண பொருட்கள்   இந்திய இந்து வளர்ச்சி கழகத்தினர் வழங்கினர்
x
தினத்தந்தி 3 July 2020 9:37 AM IST (Updated: 3 July 2020 9:37 AM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறு அருகே தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இந்திய இந்து வளர்ச்சி கழகத்தினர் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

நாகப்பட்டினம், 

தலைஞாயிறு ஒன்றியம் நாலுவேதபதி கிராமத்தை சேர்ந்தவர் அன்னலட்சுமி (வயது 40). கடந்த சிலநாட்களுக்கு முன்பு இவரது கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்து எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அகில இந்திய இந்து வளர்ச்சி கழகம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் தஞ்சை மண்டல பொறுப்பாளர் சுரேஷ் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் சுந்தரவடிவேல், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பரவை சோமசுந்தரம், நாகை மாவட்ட செயலாளர் மலையரசன், துணை செயலாளர் சர்தாஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு துணிகள், மளிகை பொருட்கள், காய்கறிகள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினர்.

Next Story