வேலை தேடும் இளைஞர்கள் தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்கள் அரசின் தனியார் வேலை வாய்ப்பு இணையதளத்தில்் விண்ணப்பித்து பயன் பெறலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்,
தமிழ்நாட்டில் வேலை தேடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணைய வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்று தரும் நோக்கத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Ta-m-i-l-n-adu pr-iv-ate job po-rt-al (www.tnp-r-iv-ate jobs.tn.gov.in ) என்ற இணையதளம் முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்கள் கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்ற பணி வாய்ப்புகளை பெறுவதற்கும், தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலியிடங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் வழங்குவதற்கும் வழிவகை செய்கிறது.
இணைய வழி நேர்காணல்
வேலை அளிப்போர் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு சேவை கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஏற்கனவே அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களால் சிறிய-பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய சூழ்நிலையில் இதற்கு மாற்றாக தனியார் துறை வேலை இணையதளம் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இணையவழி நேர்காணல் மற்றும் பணி நியமனம் ஆகிய வசதிகளை பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் உள்ள வேலை தேடும் இளைஞர்களை, இணைய வழியாக தொடர்பு கொண்டு தனியார் துறை வேலையளிப்போர்கள் பணி வாய்ப்புகளை அளிப்பதற்கான அரிய சேவை உருவாக்க தரப்பட்டுள்ளது. எனவே, இச்சேவையை வேலை தேடுபவர்களும் மற்றும் வேலை அளிப்போர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story