குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை நீதிமன்ற வழிகாட்டுதல்படி சிறையில் அடைக்க நடவடிக்கை திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. உறுதி


குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை   நீதிமன்ற வழிகாட்டுதல்படி சிறையில் அடைக்க நடவடிக்கை   திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. உறுதி
x
தினத்தந்தி 3 July 2020 5:41 AM GMT (Updated: 3 July 2020 5:41 AM GMT)

குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை நீதிமன்ற வழிகாட்டுதல்படி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.ஜெயராம் கூறி உள்ளார்.

திருச்சி, 

திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பதவி வகித்த அமல்ராஜ் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக இருந்த ஜெயராம் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று காலை திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள ஐ.ஜி. அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு போலீஸ் கமிஷனர் லோகநாதன், திருச்சி சரக டி.ஐ.ஜி.ஆனிவிஜயா மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதையடுத்து ஐ.ஜி. ஜெயராம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கை பராமரித்து, குற்ற நடவடிக்கைகளை தடுக்கவும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குற்ற வழக்குகள்

போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களை கண்ணியமாக நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை நீதிமன்ற வழிகாட்டுதல்படி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வணிகர்கள் மற்றும் அனைத்து தரப்பினருடன் நல்லுறவை பேணிகாத்து மத்திய மண்டல காவல்துறையினர் பணியாற்ற உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. குற்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்” என்று கூறி இருந்தார்.

Next Story