பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்- துண்டு பிரசுரங்கள் அரசு கொறடா வழங்கினார்


பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்- துண்டு பிரசுரங்கள்   அரசு கொறடா வழங்கினார்
x
தினத்தந்தி 3 July 2020 6:09 AM GMT (Updated: 3 July 2020 6:09 AM GMT)

அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் ரத்னா ஆகியோர் வழங்கினர்.

அரியலூர், 

அரியலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எருத்துக்காரன்பட்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தற்காப்பு வழிமுறைகள் கொண்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். தொடர்ந்து வாலாஜாநகரம் ஊராட்சி சமுதாய கூடத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் ரத்னா ஆகியோர் வழங்கினர்.

இதில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், கோட்டாட்சியர் பாலாஜி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, தாசில்தார் சந்திரசேகரன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) சாவித்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story