மாவட்ட செய்திகள்

தந்தை, தாயை இழந்ததுக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவிகள்கதக், மைசூருவில் உருக்கமான சம்பவம் + "||" + Father, lost mother SSLC in grief and Students who wrote the exam

தந்தை, தாயை இழந்ததுக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவிகள்கதக், மைசூருவில் உருக்கமான சம்பவம்

தந்தை, தாயை இழந்ததுக்கத்திலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவிகள்கதக், மைசூருவில் உருக்கமான சம்பவம்
கதக், மைசூருவில் தந்தை, தாயை இழந்த நிலையில் துக்கத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை இரு மாணவிகள் எழுதிய உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.
கதக், 

கதக், மைசூருவில் தந்தை, தாயை இழந்த நிலையில் துக்கத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை இரு மாணவிகள் எழுதிய உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

கர்நாடகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடத்தப்பட இருந்தது. ஆனால் கொரோனா பரவலை தொடர்ந்து தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. அண்டை மாநிலமான தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஜூன்) 25-ந்தேதி திட்டமிட்டப்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது. தேர்வு தொடங்கிய நிலையில் 6-க்கும் மேற்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்று தாய், தந்தையை இழந்த மாணவிகள் 2 பேர் துக்கத்திற்கு மத்தியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய உருக்கமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஆசிரியர் சாவு

கதக் (மாவட்டம்) டவுனை சேர்ந்தவர் சுரேஷ் பஜாந்திரி (வயது 50). இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இவரது மகள் அனுஷா (15) அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார். தற்போது தேர்வு நடைபெற்று வருவதால் அனுஷா தேர்வுக்காக இரவு-பகலாக படித்து வந்தார்.

இந்த நிலையில் அனுஷாவின் தந்தை சுரேஷ் பஜாந்திரி உடல் நலக்குறைவால் நேற்று காலை திடீரென்று உயிரிழந்தார். இதை பார்த்த அவரது குடும்பத்தினரும், மகள் அனுஷாவும் துக்கம் தாளாமல் கண்ணீர்விட்டு அழுதபடி இருந்தனர். நேற்று நடந்த 3-ம் மொழி பாடத் தேர்வை எழுத செல்வதா? என்ற குழப்பத்தில் அனுஷா எதிர்கால வாழ்க்கையை நினைத்தும் மிகுந்த சோகத்தில் இருந்தார்.

மகள் தேர்வு எழுதினார்

மேலும் அவர் தேர்வு எழுத செல்லவில்லை என்றும் கூறியதாகவும், தந்தை இறுதிச்சடங்கு நடந்த பிறகே தேர்வு எழுத செல்வதாகவும் கூறினார். இதை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் நீ தேர்வு எழுதிவிட்டு வந்த பிறகே தந்தையின் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்றும் குடும்பத்தினரும், உறவினர்களும் அனுஷாவிடம் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு: கைது செய்யப்பட்ட 3 போலீசார் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்
சாத்தான் குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 3 போலீசாரும் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
2. தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி நடவடிக்கை: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது மேலும் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு
தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேசை கைது செய்தனர். மேலும், இன்னொரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
3. தந்தை-மகன் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை அரசு நிச்சயம் பெற்றுத் தரும் - அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை அரசு நிச்சயம் பெற்றுத்தரும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
4. மது பழக்கத்தை கண்டித்தும் திருந்தாததால் மகனை அடித்துக்கொன்று தந்தை தற்கொலை
புதுக்கோட்டை அருகே மது பழக்கத்தை கண்டித்தும் திருந்தாததால் மகனை அடித்துக்கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
5. தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம்
தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது.