ஆரோக்கிய சேது செயலியின் செயல்பாடு கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்
ஆரோக்கிய சேது செயலியின் உபயோகத்தை மக்களிடம் சென்றடைய நாம் முழுவீச்சில் செயல்பட வேண்டும் என கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தினார்.
புதுச்சேரி,
ஆரோக்கிய சேது செயலியின் உபயோகத்தை மக்களிடம் சென்றடைய நாம் முழுவீச்சில் செயல்பட வேண்டும் என கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தினார்.
ஆரோக்கிய சேது செயலி
புதுவை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ரெட்டியார்பாளையம், திருநள்ளாறு மற்றும் பள்ளூர் காவல் நிலையங்கள், அதுபோல் நெட்டப்பாக்கம் மற்றும் திருபட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துக்களின் ஒட்டுமொத்த வழக்கு அறிக்கையின் மீதான குறிப்புகளை பார்க்கும் போது இவை அனைத்தும் இப்பொழுது நாம் செய்து கொண்டிருப்பதை காட்டிலும் இன்னும் மேன்மையாக செய்ய வேண்டும்.
அதேபோல் புதுச்சேரியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆரோக்கிய சேது செயலியை உபயோகப்படுத்துவதில் இன்னும் அதிகமாக மக்களை ஈடுபடச் செய்ய வேண்டும். அதுபோலவே, நிரவி, கோட்டுச்சேரி, திருபட்டினம், திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்கள் ஆரோக்கிய சேது செயலி உபயோகத்தை நடைமுறைப்படுத்த இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
நோய் வருமுன் காப்போம்
அதுபோல், தொழிலாளர் துறை ஆரோக்கிய சேது வழக்கு எண்ணிக்கையின் விவரத்தை குறிப்பிட வேண்டும். காரைக்கால் பகுதியை பொருத்தமட்டில் ஆரோக்கிய சேது செயலி உபயோகம் பூஜ்ஜியமாக உள்ளது. அதுபோல் மாகி, ஏனாம் ஆரோக்கிய சேது செயலி உபயோகத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். இவைகள்தான் அறிக்கையின் மீதான என்னுடைய கணிப்பு. இதை பார்க்கும்போது ஆரோக்கிய சேது செயலி உபயோகம் வடக்கு பகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வில்லியனூரை பொருத்தமட்டில் செயல்பாடு படுமோசம். இந்த செயலியின் உபயோகத்தை மக்களிடம் சென்றடைய நாம் முழுவீச்சில் செயல்பட வேண்டும்.
காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த செயலி மற்றும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நோய் வருமுன் காப்போம். இதன் மூலம் நாம் மருத்துவர்களுக்கும், மருத்துவத்துக்கும் கொடுக்கும் அழுத்தம் குறையும். அதுபோல் விதிமீறல் மீது பதியப்படும் வழக்கு கள் மக்களின் மருத்துவமனை உபயோகத்தை குறைக்கும்.
இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story