கோவில்பட்டியில் கொரோனா பரிசோதனை மையம் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்


கோவில்பட்டியில் கொரோனா பரிசோதனை மையம் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 4 July 2020 4:15 AM IST (Updated: 4 July 2020 12:01 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கொரோனா பரிசோதனை மையத்தை நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்து பார்வையிட்டார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் கொரோனா பரிசோதனை மையத்தை நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்து பார்வையிட்டார்.

கொரோனா பரிசோதனை மையம்

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை ஸ்ரீராம் நகரில் உள்ள நகர்நல மையம் கொரோனா பரிசோதனை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கொரோனா பரிசோதனை மையத்தை திறந்து வைத்து, பரிசோதனைகள் நடைபெறுவதை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

கிருமிநாசினி தெளிப்பு

தொடர்ந்து செண்பகவல்லி அம்பாள் கோயில் பின்புறம் உள்ள காந்தி மைதானத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக சந்தையில் நகரசபை சார்பில் நடைபெறும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை அமைச்சர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சிகளில் பி.சின்னப்பன் எம்.எல்.ஏ, உதவி கலெக்டர் ஜே.விஜயா, தாசில்தார்கள் மணிகண்டன், பாஸ்கரன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story