நெல்லையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை,
நெல்லையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொ.மு.ச. தர்மன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பெருமாள், ஏ.ஐ.டி.யு.சி. உலகநாதன், எச்.எம்.எஸ். சுப்பிரமணியன் உள்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதே போல் அரசு விரைவு போக்குவரத்து கழக வண்ணார்பேட்டை பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனாவையொட்டி தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விரைவு பஸ்களில் டீசல் திருடப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பொன்ராஜ், அருண், சண்முகசுந்தரம், ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டவுன்-பேட்டை
நெல்லை டவுன் வாகையடி முக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் சுடலை ராஜ் தலைமையிலும், வையாபுரி நகர் ஆட்டோ ஸ்டாண்டில் சி.ஐ.டி.யு. ஈஸ்வரமூர்த்தி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுதவிர பேட்டை மல்லிமால் தெரு, தச்சநல்லூர் மதுரை ரோடு, கே.டி.சி. நகர், சமாதானபுரம், கொக்கிரகுளம் மின்வாரிய அலுவலகங்கள், மேலப்பாளையம் சந்தை முக்கு உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story