மாவட்ட செய்திகள்

வெளிநாடுகளில் சிக்கி தவித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட 521 பேர் சென்னை வந்தனர் + "||" + A total of 521 people, including medical college students who were stranded abroad, came to Chennai

வெளிநாடுகளில் சிக்கி தவித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட 521 பேர் சென்னை வந்தனர்

வெளிநாடுகளில் சிக்கி தவித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட 521 பேர் சென்னை வந்தனர்
வெளிநாடுகளில் சிக்கி தவித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட 521 பேர் சென்னை வந்து சேர்ந்தனர்.
ஆலந்தூர்,

கொரோனா வைரஸ் ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்கள் மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு தமிழகத்தில் மட்டும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டனர்.


இந்த நிலையில் சூடானில் சிக்கி தவித்த 2 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட 43 பேருடனும், ஓமன் நாட்டில் இருந்து 8 குழந்தைகள், 30 பெண்கள் உள்பட 142 பேருடனும், குவைத்தில் இருந்து 169 பேருடனும், கிர்கிஸ்தான் நாட்டில் இருந்து 100 மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்பட 167 பேருடனும் 4 சிறப்பு விமானங்கள் சென்னை வந்தன.

இந்த 4 சிறப்பு விமானங்களில் வந்த 521 பேருக்கு சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை முடிந்ததும், அங்கேயே தமிழக பொது சுகாதார துறை சார்பில் கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அனைவரும் அரசு பஸ்களில் சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் ஓட்டல்களில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்களில் 351 பேர் சென்னை வந்தனர்
வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் 351 பேர் சென்னை வந்தனர்.
2. வெளிநாடுகளில் இருந்து வந்த 12 லட்சம் விமான பயணிகளுக்கு மருத்துவ சோதனை - மத்திய மந்திரி தகவல்
வெளிநாடுகளில் இருந்து வந்த 12 லட்சம் விமான பயணிகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
3. வெளிநாடுகளில் 17 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - நாடாளுமன்றத்தில் தகவல்
வெளிநாடுகளில் 17 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.