கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 15 பேருக்கு கொரோனா பாதிப்பு 187 ஆக உயர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பேர் உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பேர் உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பந்தாரப்பள்ளியைச் சேர்ந்தவர் 30 வயது ஆண். இவர் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த அலுவலகத்தில் உள்ள 25 ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அலுவலகத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்
சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரிக்கு வந்த 48 வயது பெண், ஓசூர் மைக்ரோ லேப் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பர்கூர் கந்திகுப்பத்தைச் சேர்ந்த 28 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல பர்கூரில் வசிக்கும் 58 வயது ஆணுக்கு ஐதராபாத்தில் இருந்து வந்தவர் மூலமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் உள்ள ஒரு வீட்டிற்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 28 வயது ஆண், 24 வயது ஆண், 24 வயது பெண், 14 வயது சிறுவன் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
187 பேர் பாதிப்பு
இதேபோல கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் காலனியில் 19 வயது பெண்ணுக்கும், 51 வயது பெண்ணுக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. அந்த பகுதியில் ஏற்கனவே வந்துள்ள ஒரு பெண் சிறை வார்டன் மூலமாக அவர்களுக்கு கொரோனா பரவியதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story