ராமநாதபுரம் மாவட்டத்தில் 68 பேருக்கு கொரோனா டாக்டர்- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு தொற்று உறுதி


ராமநாதபுரம் மாவட்டத்தில் 68 பேருக்கு கொரோனா   டாக்டர்- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 4 July 2020 7:57 AM IST (Updated: 4 July 2020 7:57 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,108 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கழனிக்குடியை சேர்ந்த 60 வயது நபர், அவரின் மனைவி, ராமநாதபுரம் தெற்கு ரதவீதி 31 வயது பெண், செட்டிய தெரு 69 வயது நபர், பாரதியார்நகர் 48 வயது நபர், தெற்கு ரதவீதி 47 வயது பெண், வசந்த நகர் 18 மற்றும் 19 வயது பெண்கள், பாலசுப்பிரமணியசாமி கோவில் தெரு 65 வயது பெண், கேணிக்கரை 37 வயது நபர், ஆர்.எஸ்.மங்கலம் டி.டி.மெயின்ரோடு 29 வயது நபர், கீழக்கரை 34 வயது நபர், தட்டான்தோப்பு 71 வயது நபர், திருவாடானை பாண்டுகுடி 58 வயது பெண், 41 வயது நபர், தொண்டி கிழக்கு சிவன்கோவில் தெரு 26 வயது பெண் டாக்டர், நம்புதாளை படையாச்சி தெரு 34 வயது நபர், திருவாடானை வடக்குத்தெரு 61 வயது நபர், தொண்டி 24 வயது நபர், பேரையூர் 24 வயது பெண், முதுகுளத்தூர் நல்லாங்குளம் 29 வயது நபர், கீழரதவீதி 58 வயது பெண், நயினார்கோவில் ராதாபுளி 43 வயது நபர், பரமக்குடி பாரதியார்தெரு 49 வயது பெண், பரமக்குடி நகர் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் ஆர்.ஆர். சேதுபதி நகர் டாக்டர், ஏர்வாடி 25 வயது பெண், முதுகுளத்தூர் 46 வயது நபர், ராமநாதபுரம் வெளிப்பட்டணம் 23 வயது பெண், ராமநாதபுரம் 40 மற்றும் 32 வயது நபர்கள், 63 வயது பெண், காட்டூரணி 53 வயது நபர், பாப்பாகுடி 20 மற்றும் 22 வயது நபர்கள், பட்டணம்காத்தான் 45 வயது நபர், தேர்போகி 34 வயது நபர், ராமநாதபுரம் வசந்தநகர் 63 வயது நபர், ஓம்சக்திநகர் 22 வயது நபர், ராமநாதபுரம் கோட்டை மேடு 29 வயது பெண், ராமநாதபுரம் மதுரயார்தெரு 42 வயது நபர், இந்திரா நகர் 54, வண்டிக்காரத்தெரு 38 வயது நபர், சவேரியார்தெரு 31 வயது நபர், பட்டணம்காத்தான் 39 வயது நபர், முதுனாள் 46 வயது நபர், ராமநாதபுரம் காவலர் குடியிருப்பு 24 வயது நபர், பாலசுப்பிரமணியசுவாமி கோவில் தெரு 38 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

68 பேர்

இதுதவிர ராமநாதபுரம் மேற்குதெரு 29 வயது நபர், பெரியகருப்பன் நகர் 32 வயது பெண், தெற்குதெரு 31 வயது பெண், கே.கே.நகர் 39 வயது நபர், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக 29 வயது பெண், தெற்குபெருவயல் 25 வயது நபர், ராமநாதபுரம் முல்லைநகர் 58 வயது நபர், அவரின் மனைவி, ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசல் தெரு 57 வயது நபர், ராமநாதபுரம் நூரா அபார்ட்மெண்ட் 31 வயது நபர், வள்ளல்பாரி துர்கா தெரு 23 வயது பெண், பரமக்குடி பொன்னையாபுரம் 59 வயது பெண், எமனேஸ்வரம் பாரதியார்தெரு 31 வயது நபர், பரமக்குடி அம்மன் சன்னதி தெரு 28 வயது நபர், பரமக்குடி திலகர் காலனி 57 வயது நபர், சின்னக்கடை தெரு 55 வயது நபர் மற்றும் 28 வயது பெண், மேலத்தெரு 28 வயது நபர், காந்திஜி ரோடு 17 வயது சிறுமி, விளாத்தூர் 2 வயது குழந்தை ஆகிய 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,176 ஆக உயர்ந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்து வருவதும் தற்போதைய நிலையில் ஆயிரத்தை தாண்டி சென்றுள்ளதும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Next Story