சாத்தான்குளம் சம்பவத்தில் அரசியல் குறுக்கீடு இல்லை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


சாத்தான்குளம் சம்பவத்தில் அரசியல் குறுக்கீடு இல்லை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 5 July 2020 4:00 AM IST (Updated: 4 July 2020 10:26 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் சம்பவத்தில் அரசியல் குறுக்கீடு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

நெல்லை, 

சாத்தான்குளம் சம்பவத்தில் அரசியல் குறுக்கீடு இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

பேட்டி

அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

சாத்தான்குளம் சம்பவத்தில் அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுக்கு யார் மீதும் எந்த பாகுபாடும் கிடையாது. இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவம் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எட்டயபுரத்தை சேர்ந்த ஒருவர் இறந்த சம்பவத்தில் போலீசாருக்கு தொடர்பு கிடையாது. மனிதாபிமான அடிப்படையில் உதவிதான் செய்தோம். அதையும் அரசியல் ஆக்க முயற்சி செய்தார்கள். அரசுக்கு எந்தவித பாரபட்சமும் கிடையாது. இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை முடிவில் அரசு நல்ல முடிவு எடுக்கும்.

அரசியல் குறுக்கீடு கிடையாது

சாத்தான்குளம் சம்பவத்தில் அரசியல் குறுக்கீடு கிடையாது. பொய்யான தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்தவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டு உள்ளது. இதை அரசியல் ஆக்க கூடாது.

சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உடன் என்னை தொடர்பு படுத்தி பேசுவது முற்றிலும் தவறானது என்பது நிரூபணமாகி விட்டது. அந்த இன்ஸ்பெக்டர் கேரளாவில் உள்ள பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். இதிலேயும் அரசியல் செய்தவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story