தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு தேவையின்றி வெளியே வந்தால் கடும் நடவடிக்கை


தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு தேவையின்றி வெளியே வந்தால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 July 2020 10:00 PM GMT (Updated: 2020-07-05T00:48:22+05:30)

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

தென்காசி, 

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி தேவையின்றி வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இன்று முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகத்தில் இந்த மாதம் (ஜூலை) 4 ஞாயிற்றுக்கிழமைகள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று முதலாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நெல்லை, தென்காசி மாவட்ட கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடும் நடவடிக்கை

முழு ஊரடங்கையொட்டி 2 மாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அவசியமின்றி வெளியே நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, முழு ஊரடங்கில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். வாகனங்கள் இயக்கவும் தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய, அவசர தேவையின்றி வாகனங்கள் இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கொரோனாவை ஒழிக்க தனி மனித இடைவெளி அவசியம் ஆகும். அதனை இன்று கடைபிடிக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story