எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வெற்றிகரமாக முடிந்தது: பிற தேர்வுகளை நடத்துவது குறித்து அரசுக்கு சித்தராமையா ஆலோசனை


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வெற்றிகரமாக முடிந்தது: பிற தேர்வுகளை நடத்துவது குறித்து அரசுக்கு சித்தராமையா ஆலோசனை
x
தினத்தந்தி 5 July 2020 4:00 AM IST (Updated: 5 July 2020 1:15 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தொடர்ந்து, பிற தேர்வுகளை நடத்துவது குறித்து அரசுக்கு சித்தராாமையா ஆலோசனை கூறியுள்ளார்.

பெங்களூரு, 

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தொடர்ந்து, பிற தேர்வுகளை நடத்துவது குறித்து அரசுக்கு சித்தராாமையா ஆலோசனை கூறியுள்ளார்.

தேர்வுகளை நடத்த ஆர்வம்

கர்நாடகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளுடன் கடந்த 25-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்கியது. இந்த தேர்வு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து பிற தேர்வுகளையும் நடத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக, கர்நாடக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சில ஆலோசனைகளை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்வை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டோம் என்று கருதும் மாநில அரசு, அடுத்து வரும் நாட்களில் இன்னும் பல்வேறு துறைகளின் தேர்வுகளை நடத்த ஆர்வம் காட்டுவது போல் உள்ளது. தேர்வு எழுதிய அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று நான் நம்புகிறேன்.

சேகரிக்க வேண்டும்

ஆனால் உண்மை நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள நாம் இன்னும் 15 நாட்கள் காத்திருக்க வேண்டும். கடந்த ஜூன் 15-ந் தேதி முதல் ஜூலை 20-ந் தேதி வரையில் கொரோனா நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த மாணவர்கள் யாராவது தேர்வு எழுதினார்களா என்பதை அறிய விவரங்களை சேகரிக்க வேண்டும். இந்த விவரங்கள், அடுத்து நடத்த திட்டமிடும் அனைத்து தேர்வுகளையும் பாதுகாப்பான முறையில் நடத்த உதவும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Next Story