கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு? முதல்-மந்திரி எடியூரப்பா பரபரப்பு தகவல்


கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு? முதல்-மந்திரி எடியூரப்பா பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 5 July 2020 4:00 AM IST (Updated: 5 July 2020 1:26 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.

பெங்களூரு,

கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.

தீவிரமான கட்டுப்பாடுகள்

கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதில் தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை ஏறத்தாழ ஆயிரத்தை நெருங்கியது. இதனால் நகரவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா பாதித்தோருக்கு மருத்துவமனைகளில் படுக்கை கிடைப்பது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. நேற்று முன்தினம் பெங்களூருவில் 53 வயது நபர் ஒருவர், கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இடம் கிடைக்காததால், வீட்டு வாசலிலேயே உயிரிழந்த சம்பவம், பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்த பிறகு கொரோனாவை தடுக்க தீவிரமான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று கூறினார். அவர் கூறியபடி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று முன்தினம் முடிவடைந்துவிட்டது. அதனால் கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், கொரோனா பரவலை கண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள்.

எடியூரப்பா அறிவிப்பு

இந்த நிலையில், கர்நாடகத்தில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கவில்லை முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கர்நாடகத்தில் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்தை தடை செய்வது குறித்தோ அல்லது மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தோ யாருடனும் நான் ஆலோசிக்கவில்லை. இது தொடர்பாக நாளை (இன்று) ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தகைய கூட்டத்தை நான் கூட்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story