புதிதாக மேலும் 10 கட்டுப்பாட்டு மண்டலங்கள் கலெக்டர் அருண் தகவல்


புதிதாக மேலும் 10 கட்டுப்பாட்டு மண்டலங்கள் கலெக்டர் அருண் தகவல்
x
தினத்தந்தி 5 July 2020 3:30 AM IST (Updated: 5 July 2020 2:25 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் மேலும் 10 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் மேலும் 10 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.

10 கட்டுப்பாட்டு மண்டலம்

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கொரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.எல்லைப்பிள்ளைச்சாவடி மோகன் நகர் 3-வது குறுக்குத்தெரு, 2.மூலக்குளம் ஆதிகேசவன் நகர் 4-வது குறுக்குத்தெரு, 3.மேரி உழவர்கரை சக்தி நகர் 2-வது குறுக்குத்தெரு, 4.தட்டாஞ்சாவடி கல்கி நகர் 3-வது குறுக்குத்தெரு, 5.தர்மாபுரி புரட்சி தலைவி நகர் 2-வது குறுக்குத்தெரு, 6.கருவடிக்குப்பம் நெசவாளர் நகர் கலைமகள் வீதி, 7. கரியமாணிக்கம் மடுகரை முதன்மை சாலையில் ஒரு பகுதி, 8.பாகூர் புதுகாமராஜர் நகர், முதல் குறுக்குத்தெரு ஒரு பகுதி, 9.கிருமாம்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் தெரு ஒரு பகுதி, 10.பாகூர் கூட்டுறவு நகரின் ஒரு பகுதி ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அந்த பகுதிகளில் பொதுபோக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது.

ரூ.44,250 அபராதம்

மேலும் புதுவை மாநிலத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,636 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 16,667 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேவையின்றி சுற்றித்திரிந்ததாக 1,432 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா விதிமீறலுக்காக நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களில் நேற்று ஒரே நாளில் ரூ.44,250 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story