கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை கண்காணிக்க மாவட்ட குழு மராட்டிய அரசு அமைத்தது
மராட்டியத்தில்கொரோனாவுக்குசிகிச்சை அளிக்கும்மருத்துவமனைகளை கண்காணிக்கமாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவை மாநில அரசு அமைத்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில்கொரோனாவுக்குசிகிச்சை அளிக்கும்மருத்துவமனைகளை கண்காணிக்கமாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவை மாநில அரசு அமைத்து உள்ளது.
கொரோனா
கொரோனவால் மராட்டியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன. தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தையும் அரசு நிர்ணயம் செய்தது.
தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மாநில அரசின் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை எனவும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.
கண்காணிப்பு குழு
இந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை கண்காணிக்க மும்பையை தவிர மற்ற மாவட்டங்களில் கண்காணிப்பு குழுவை மாநில அரசு அமைத்து உள்ளது.
மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ள இந்த குழுவில் அந்தந்த மாவட்ட சிவில் சர்ஜன், மாநகராட்சி கமிஷனர்கள், மருத்துவ கல்லூரிகளின் டீன், இருதய நோய் நிபுணர்கள், இந்திய மருத்துவ சங்க நிபுணர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் கண்காணிப்பு கேமரா வசதி இருக்க வேண்டும். கண்காணிப்புக்குழு ஆய்வுக்கு வரும் போது, கண்காட்சி கேமரா காட்சிகள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
மும்பைக்கு மாநகராட்சி கமிஷனர் தலைமையில் தனியாக 12 பேர் கொண்ட கண்காணிப்பு கமிட்டி அமைக்கப்பட உள்ளது. இந்த அனைத்து கண்காணிப்பு குழுக்களும் தங்களது ஆய்வு குறித்த விவரங்களை மாநில தலைமை செயலாளருக்கு அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள்.
இந்த தகவலை மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story