முதல்-மந்திரி, மந்திரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை பட்னாவிஸ் குற்றச்சாட்டு


முதல்-மந்திரி, மந்திரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை பட்னாவிஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 July 2020 4:00 AM IST (Updated: 5 July 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை என எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை என எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டி உள்ளார்.

ஒருங்கிணைப்பு இல்லை

மராட்டியத்தில் கொரோனா உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மந்திரிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் திடீரென முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் சந்தித்து பேசினார்கள். இது தொடர்பாக பாரதீய ஜனதாவை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிவசேனா தலைமையிலான மகா விகாஷ் கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லை என்று நான் முதல் நாளில் இருந்தே கூறி வருகிறேன். அரசாங்கத்திலும் ஒருங்கிணைப்பு இல்லை. முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளுக்கு இடையேயும் ஒருங்கிணைப்பு இல்லை.

விசாலமாக சிந்திக்க வேண்டும்

ஊரடங்கு இருக்க கூடாது என்பது எனது கருத்து அல்ல. ஊரடங்கை நீட்டிப்பது போன்ற முடிவை விசாலமாக சிந்திக்க வேண்டும். குறிப்பிட்ட சில இடங்களில் பகுதியாக ஊரடங்கை செயல்படுத்தலாம். நிலைமை உண்மையிலேயே கைவிட்டு சென்றால் பெரியளவில் ஊரடங்கு அமல்படுத்துவதை பற்றி சிந்திக்கலாம். கொள்கைக்கு பூட்டு போட்டால் நாம் ஒருபோதும் இதிலிருந்து வெளியேற முடியாது. மாநிலத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story