கோவை பூமார்க்கெட்டில் புதிய கடைகள் கட்டும் பணி தீவிரம்


கோவை பூமார்க்கெட்டில்  புதிய கடைகள் கட்டும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 5 July 2020 4:45 AM IST (Updated: 5 July 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

கோவை பூமார்க்கெட்டில் புதிய கடைகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை,

கொரோனா பரவலை தொடர்ந்து மக்கள் நெருக்கம் அதிகமுள்ள கடைகளை குறிப்பாக காய்கறி கடைகளை வேறு இடத்துக்கு மாற்றி 

அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கோவையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகள் பஸ் 

நிலையங்களுக்கு மாற்றப்பட்டன.

அதன் பின்னர் ஏற்கனவே இருந்த பகுதியிலேயே காய்கறி கடைகள் இடைவெளி விட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், 

கோவை ஆர்.எஸ்.புரம் மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டு வந்த பூமார்க்கெட் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீல் 

வைக்கப்பட்டன. சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று கூறி அந்த கடைகளை கோவை மாநகராட்சி நிர்வாகம் மூடியது.

புதிய கடைகள்

இந்த நிலையில் பூமார்க்கெட் கடைகள் தேவாங்கர் பள்ளி மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் 

தங்களுக்கு புதிய கடைகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று பூமார்க்கெட் கடைக்காரர்களுக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாநகராட்சி மலர் 

அங்காடி வளாகத்தில் தற்போது புதிதாக கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் 

கூறியதாவது:-

10 நாட்களில் முடிந்துவிடும்

கோவை மலர் அங்காடி வளாகத்தில் 95 கடைகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கடையும் 6 அடிக்கு 8 அடி என்ற 

பரப்பளவில் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கடைகள் கட்டும் பணிகள் இன்னும் 10 நாட்களில் முடிந்து விடும். அதன்பின்னர் 

பூக்கடைகள் புதிய இடத்துக்கு மாற்றப்பட்டு விடும்.

பூமார்க்கெட்டில் ஏற்கனவே சுமார் 175 கடைகள் இருந்தன. அவற்றில் ஏறத்தாழ 95 கடைகள் தான் புதிய இடத்துக்கு மாற்றப்பட 

உள்ளன. மற்றவர்களுக்கு கடைகள் ஒதுக்குவது பற்றி மாநகராட்சி உயர் அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story