கொடைக்கானல் நட்சத்திர ஏரியை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
கொடைக்கானலில் புகழ் பெற்ற நட்சத்திர ஏரியை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் புகழ் பெற்ற நட்சத்திர ஏரி உள்ளது. 4½ கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஏரியில் ஆண்டுதோறும் படகு சவாரி நடைபெறுவது வழக்கம். மேலும் இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் பழனி நகருக்கு குடிநீராக பயன்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறிய நிலையில், இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் நீர்மட்டம் குறைந்துவிட்டது. மேலும் அதில் தற்போது நீர்த்தாவரங்கள் மற்றும் கழிவுகள் அதிக அளவில் படர்ந்து இருந்தன. இதையடுத்து ஏரியை தூய்மைப்படுத்த நகராட்சி ஆணையர் நாராயணன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சுகாதார ஆய்வாளர் சுப்பையா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த சில நாட்களாக ஏரியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஏரியில் படர்ந்துள்ள நீர்த்தாவரங்கள் மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story