தர்மத்துபட்டியில் ரூ.50 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றியக்குழு தலைவர் குத்துவிளக்கேற்றினார்


தர்மத்துபட்டியில் ரூ.50 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றியக்குழு தலைவர் குத்துவிளக்கேற்றினார்
x
தினத்தந்தி 5 July 2020 7:14 AM IST (Updated: 5 July 2020 7:14 AM IST)
t-max-icont-min-icon

தர்மத்துபட்டியில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளிமான்கோம்பை, தர்மத்துபட்டி, மூனாண்டிபட்டி, அணைக் கரைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவ சிகிச்சைக் காக 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆண்டிப்பட்டிக்கு வரவேண்டியிருந்தது. எனவே மருத்துவ சிகிச்சைக்கு அதிக தூரம் பயணம் செய்து வந்த பொதுமக்கள் தர்மத்துபட்டியில் ஆரம்ப சுகாதாரநிலையம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தர்மத்துபட்டியில் புதிய அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் அமைக்க தமிழக அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி இதன் கட்டிட பணிகள் நிறைவு பெற்று, தர்மத்துபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர்.

இதனையடுத்து தர்மத்துபட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் ஏ.லோகிராஜன் குத்துவிளக்கேற்றினார். இதில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் டி.ஆர்.என்.வரதராஜன், அ.தி.மு.க ஒன்றிய துணை செயலாளர் அமரேசன், ஆண்டிப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் சி.ஆர்.ராஜா, முன்னாள் கூட்டுறவு சங்கதலைவர் மரிக் குண்டு செல்வம் மற்றும் கூட்டுறவு சங்கத்தினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 24 மணிநேரமும் செயல்படும் இந்த சுகாதாரநிலையத்தில் பல்வேறு மருத்துவ வசதிகள் செய்யப்பட உள்ளதாக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இளங்கோவன் தெரிவித்தார்.

Next Story