கொரோனா பரிசோதனை முடிவுகளை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் அரசு ஆஸ்பத்திரி டீன் தகவல்


கொரோனா பரிசோதனை முடிவுகளை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் அரசு ஆஸ்பத்திரி டீன் தகவல்
x
தினத்தந்தி 5 July 2020 7:31 AM IST (Updated: 5 July 2020 7:31 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரிசோதனை முடிவுகளை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம் என அரசு ஆஸ்பத்திரி டீன் கூறினார்.

மதுரை, 

மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் சங்குமணி கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதுரை மருத்துவ கல்லூரியில் நாள்தோறும் 1,500 முதல் 2 ஆயிரம் மாதிரிகள் மத்திய ஆய்வு தரக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி செய்யப்பட்டு வருகிறது. ஆய்வக முடிவுகள் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நேரில் பெற்றுக் கொள்ளும் வசதி இருந்தது.

ஆன்லைன் மூலம் அறியலாம்

தற்போது இது காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆய்வக முடிவுகளை நூலகம் அருகே உள்ள இடத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் ஆன்லைனில் பரிசோதனை முடிவுகளை பார்க்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.md-mc.ac.in எனும் இணையதளத்தில் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். ஒருவரது பெயர், வயது மற்றும் செல்போனின் கடைசி 5 இலக்க எண்களை உபயோகித்து பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பரிசோதனை முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. ஒருவரது பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின் 7 நாட்கள் வரை மட்டுமே மேற்கண்ட இணையதளத்தில் முடிவுகள் காண்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story