தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி கலெக்டர் தகவல்


தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி   கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 5 July 2020 8:26 AM IST (Updated: 5 July 2020 8:26 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர், 

விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் இந்திய மருத்துவ கழகம் அறிவுரைப்படி அனைத்து தனியார் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் கொரோனா சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று உள்ள நோயாளிகளின் விவரங்களை அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் நடத்தும் இலவச முகாம்களில் தனியார் மருத்துவமனைகள் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story