தஞ்சை தொம்பன்குடிசை பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் பொதுமக்களுக்கு வாந்தி, பேதி


தஞ்சை தொம்பன்குடிசை பகுதியில்  குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் பொதுமக்களுக்கு வாந்தி, பேதி
x
தினத்தந்தி 5 July 2020 4:30 AM GMT (Updated: 5 July 2020 4:30 AM GMT)

தஞ்சை தொம்பன்குடிசை பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் பொதுமக்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு திருமானூர் அருகே உள்ள கொள்ளிடம் நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாநகராட்சி 32-வது வார்டில் உள்ளது தொம்பன்குடிசை பகுதி. இந்த பகுதியில் உள்ள 4 மற்றும் 5-வது தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் வசித்து வந்த மக்கள் கடந்த சில நாட்களாக வாந்தி, பேதியால் அவதிப்பட்டு வந்தனர். நேற்று 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தனி யார் மற்றும் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் குடிநீரும் கலங்கிய நிலையில் வந்துள்ளது.

வாந்தி- பேதி

இந்த தண்ணீர் பயன் படுத்தியதால் தான் வாந்தி, பேதி ஏற்பட்டது தெரிய வந்தது. இதனால் அந்த பகுதி யில் வசித்து வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரி களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அதன்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று குடிநீரின் தரத்தை ஆய்வு செய்ததில் குடிநீரில் கழிவுநீர் கலந்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்த குழாயை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு இடத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலந்தது தெரிய வந்தது. அந்த பகுதியில் ஒரு வீட்டிற்கு பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டிய போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதை அடைத்த போது சரிவர பணிகளை மேற்கொள்ளாத தால் கழிவுநீர் குடிநீருடன் கலந்தது தெரிய வந்தது.

மருத்துவ முகாம்

இதையடுத்து தெருக்களுக்கு குடிநீர் சப்ளை உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பும் சரி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதி பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிலை யில் பொதுமக்கள் வாந்தி பேதியால் பாதிக்கப் பட்டதையடுத்து, மாநகராட்சி ஏற்பாட்டின் பேரில் அந்த பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு அனைத்து பொதுமக்களும் பரிசோதிக்கப்பட்டனர். அப்போது மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், உதவி பொறியாளர்கள் ரமேஷ், சித்ரா, கீழவாசல் பகுதி அ.தி.மு.க. செயலாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story