வடகாட்டில் மரக்கடைகளில் வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
வடகாட்டில் மரக்கடைகளில் வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
வடகாடு,
வடகாட்டில் மரக்கட்டைகள் வாங்கி விற்பனை செய்யப்படும் மரக்கடைகளில், புதுக்கோட்டை வனச்சரக ஆய்வாளர் சங்கர், திருச்சி உதவி வனப்பாதுகாப்பு படை அலுவலர் நாகையா மற்றும் வன உதவியாளர்கள் ஆகியோர் அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனை முடிவில் 80 சதவீத மரக்கட்டைகள் உரிய அனுமதியுடன் இருந்தது தெரியவந்தது. மீதமுள்ள 20 சதவீத மரக்கட்டைகள் வடகாடு பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரின் அனுமதி கடிதத்துடன் மட்டுமே இருந்தது. அதற்கான அடங்கல் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து கொடுக்கும்படி மரக்கடைக்காரர்களிடம், அதிகாரிகள் கூறினர். இதுபோல் சோதனை நடத்துவதால், வனத்தில் உள்ள மரங்களை வெட்டி கடத்துதல் போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்று புதுக்கோட்டை வனச்சரக ஆய்வாளர் சங்கர் கூறினார்.
Related Tags :
Next Story