முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கு காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
வள்ளியூர்,
முழு ஊரடங்கு காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
முழு ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதிகளில் நேற்று மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. மேலும் இப்பகுதிகளில் உள்ள சாலைகள், பஸ் நிலையங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
அம்பை பகுதியில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. ஒரு சில மருந்து கடைகள் மட்டும் செயல்பட்டது. அது தவிர மெயின் ரோடு முழுவதும், தெருக்களிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. நகர் முழுவதும் அம்பை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நகரசபை சார்பில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வும், கிருமி நாசினியும் அடிக்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க போலீஸ் தடை விதித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கூடல், சேரன்மாதேவி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் சாலைகள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
Related Tags :
Next Story